மருத்துவமனையில் ரசிகர்: போன் செய்து நலம் விசாரித்த ரஜினிகாந்த்

Author
Fathima- inCinema
Report
0Shares

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நாளில் இருந்தே ரசிகராய் இருந்து வருபவர் ஏ.பி.முத்துமணி.

மதுரையை சேர்ந்த முத்துமணி தான் ரஜினிக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கியவர்.

இந்நிலையில் நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த முத்துமணி கடந்த இரண்டு நாட்களாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைப்பற்றி கேள்விபட்டதும், முத்துமணியை போனில் அழைத்து நலம் விசாரித்ததுடன் அவரது மனைவிக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.

அத்துடன் நிச்சயமாக முத்துமணி விரைவில் குணமாகி வருவர கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.