பாப்கார்ன் விற்கும் ஏழை சிறுவனுக்கு பிரபல நடிகரின் நெகிழ வைக்கும் உதவி

Author
Fathima- inCinema
Report
0Shares

ஆன்லைன் வகுப்புக்காக பாப்கார்ன் விற்கும் ஏழை சிறுவனுக்கு மொபைல் போனை வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார் சோனுசூட்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராள மனதுடன் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார் நடிகர் சோனுசூட்.

இதனையடுத்து பலரும் சோனுசூட்டுக்கு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் பெண் ஒருவர், ஆன்லைன் வகுப்புக்காக பாப்கார்ன் விற்கும் சிறுவனுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிகொடுக்கும் படி கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த சோனுசூட், ‘ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுக்கிறேன். சிறுவனின் விவரங்களை அனுப்புங்கள். ஆனால், எனக்கு சிறுவன் பாப்கார்ன் கொடுக்கவேண்டும்’ என்று நகைச்சுவையோடு கூறியிருக்கிறார்.