நடிகர் சூர்யா - ஜோதிகா பற்றி தவறாக பேசியதாக சினிமா இயக்குனர் மீது ரசிகர்கள் புகார்

Author
Praveen Rajendran- inCinema
Report
0Shares

நடிகர் சூர்யா-ஜோதிகா பற்றி அவதூறு பரப்புவதாக சினிமா இயக்குனர் மீது ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.

சமீபத்தில் நடிகர் சூர்யா நீட் தேர்வு பற்றி கருது தெரிவிக்கையில் நீதிமன்றத்தைப்பற்றி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. மேலும் சூர்யாவின் கருத்தை நீதிமன்ற அவமதிப்பாக ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த பிரச்சனைகள் முடிந்த நிலையில் தற்போது நேற்று அகில இந்திய தலைமை சூர்யா நற்பணி இயக்க நிர்வாகிகள் சிலர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தனர்.

அந்த புகாரில் தெரிவித்தது என்னவெனில்,"எங்கள் அண்ணன் சூர்யா மற்றும் ஜோதிகாவை பற்றி சமூகவலைத்தளங்களில் தவறான செய்திகள் பரவிவருவதாக அறிந்தோம், இதனை அறிந்து மிகவும் வருத்தம் அடைத்துளோம்.

அதுமட்டுமின்றி நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமார் பற்றியும் பல தவறான விஷயங்களை சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த அவதூறுகளை பரப்பியவர் சினிமா இயக்குனர் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.