எஸ்பி பாலசுப்பிரமணியம் மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் கமல்ஹாசன்

Author
Fathima- inCinema
Report
756Shares

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமடைந்துள்ள வெளியான தகவலையடுத்து, நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் எம்ஜிஎம் மருத்துவமனையில் எஸ்பிபி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், 13ம் தேதி அவர் உடல்நிலை மோசமடைந்தது.

தொடர்ந்து உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்மோ கருவிகள், சுவாசக்கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் முழுமையாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவதாக அந்த மருத்துவமனை கூறியுள்ளது.

கமல்ஹாசன் வருகை

எஸ்.பி.பி உடல்நிலை தொடர்பான தகவல் வெளிவந்ததும் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நடிகர் கமல் ஹாசன் இன்று இரவு 8 மணியளவில் சென்றுள்ளார்.

அங்குள்ள அவரது மகன் எஸ்.பி. சரணிடம் அவரது தந்தையின் உடல்நிலைமை குறித்து அவர் கேட்டறிந்தார். 20 நிமிடங்கள் அங்கிருந்த அவர் பிறகு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.