எஸ்.பி.பி உடல்நிலை திடீர் பின்னடைவு; தீவிர பிரார்த்தனையில் ரசிகர்கள்

Author
Rooban- inCinema
Report
728Shares

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த மாதம் 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.

இதனால், எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென பலரும் பிரார்த்தனை செய்தார்கள்.

அதன் பலனாக படிப்படியாக எஸ்.பி.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது.

மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சையால் மயக்கநிலையில் இருந்து முற்றிலும் சீரான நிலைக்கு வந்தார்.

இதை உறுதிசெய்யும் விதமாக, அவரது மகன் எஸ்.பி சரண் அன்றாடம் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துவந்தார்.

இதையடுத்து, தற்போது மருத்துவமனை அறிக்கையில் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும், சிறப்பு மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எஸ்.பி.பி உடல்நிலை மீண்டும் பின்னடைவாகி இறந்துவிட்டதாக செய்திகள் உலா வர தொடங்கியுள்ளன. ரசிகர்கள் பலரும் மீண்டும் வர வேண்டும் என தீவிர பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.