"என் குரலாக இருந்துள்ளீர்கள்.. உங்கள் நினைவுகள் என்றும் என்னுடன் வாழும்" - ரஜினி இரங்கல்

Author
Mohan Elango- inCinema
Report
755Shares
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு திரையுலகினரைத் தாண்டி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒரு மாதத்திற்கும் மேலாக எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி மறைந்தார்.

அவரின் மறைவுக்கு திரை துறையினர், அரசியல்வாதிகள், தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தும் தன்னுடைய இரங்கல் செய்தியை ட்விட்டரில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில் ”என் குரலாக நீண்ட காலம் இருந்துள்ளீர்கள். உங்களுடைய நினைவுகள் என்றும் என்னுடன் வாழும். உங்களை நிச்சயமாக மிஸ் செய்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.