மருத்துவமனையில் கையெடுத்து கும்பிட்டு உருக்கமாக பேசிய எஸ்பி சரண்

Author
Fathima- inCinema
Report
767Shares

என்னுடைய தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என உருக்கமாக பேசியுள்ளார் எஸ்பி சரண்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் இறந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதன்பின்னர் மருத்துவமனையில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் கையெடுத்து கும்பிட்டு பேசிய எஸ்பி சரண், எஸ்பிபி உங்கள் அனைவரின் சொத்து, அப்பாவுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.

உங்களின் ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்.பி.பி.யின் பாடல்கள் இருக்கும் வரை, நீங்கள் எல்லாம் இருக்கும் வரை அப்பா இருப்பார்.

MGM Healthcare மருத்துவர்களுக்கும், நர்ஸ்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கண்கலங்கிபடியே தெரிவித்துள்ளார்.