என்னை இங்கு தான் அடக்கம் செய்ய வேண்டும்: 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய எஸ்பிபி

Author
Fathima- inCinema
Report
778Shares

தான் இறந்துபோனால் பண்ணை வீட்டில் தான் அடக்கம் செய்ய வேண்டுமென 15 ஆண்டுகளுக்கு முன்பே எஸ்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்தாக எல்லாபுரம் கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று நண்பகல் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது மறைவுக்கு பொதுமக்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் சூழலில், நாளை தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பே தன்னை பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய வேண்டும் என எஸ்பிபி கூறியதாக எல்லாபுரம் கவுன்சிலர் ஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இன்று எஸ்பிபி மறைவுச் செய்தியை கேட்டு தாமரைப்பாக்கம் தொகுதி மக்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் இருக்கிறோம்.

இந்த பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளை செய்துள்ளார், கொரோனா காலத்தில் கூட அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இங்குள்ள பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் எஸ்பிபியும் எஸ்பிபி சரணும் சேர்ந்து செய்துள்ளார்கள்.

இந்த பண்ணை வீட்டில் அவருடைய பாட்டி, அம்மா, மாமியார் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பண்ணை வீட்டில் அவர் இருக்கும் போது, "நான் இறந்துவிட்டால் என்னை எனது பண்ணை வீட்டிலேயே அடக்கம் செய்து மணி மண்டபம் கட்ட வேண்டும் என 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது விருப்பத்தை கூறியிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்பிபிக்கு சிவன் என்றால் பிரியம் என்றும், சிவன் கோவிலுக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்படுவதாகவும், அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.