தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது... இதைச் சொன்னால் மட்டும் சற்று கோபப்படுவார் எஸ்பிபி!

Author
Fathima- inCinema
Report
53Shares

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில், இப்போது டிஸ்ஜார்ஜ் இல்லை என்று சொன்னால் மட்டும் எஸ்பிபி சற்று கோபப்படுவார் என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தீபக் சுப்ரமணியன் மற்றும் நந்த கிஷோர் கூறுகையில், எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கென்று ஆறாவது மாடியில் ICU பிரிவை அமைத்தோம்.

சுயநினைவு திரும்பியவுடன் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்காக அவருக்கு ஒரு ஐபேட் கொடுத்தோம்.

தனக்கு பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்று கூறினார், தான் பேச நினைப்பதை எழுதி காண்பிப்பார்.

தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரையுமே மரியாதையுடன் நடத்தினார்.

"எப்போது டிஸ்சார்ஜ்" என எழுதி கேட்பார். இப்போது இல்லை என கூறினால் சற்று கோவப்படுவார் என தெரிவித்துள்ளனர்.

மேலும் திருமண நாளன்று மனைவி கேக் வெட்டிய போது அதை பார்த்து சிரித்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.