அனிருத்தின் பிறந்தநாளையொட்டி மாஸ்டர் பட 'Quit Pannuda' சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு

Author
Nalini- inCinema
Report
0Shares

இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளையொட்டி மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மாஸ்டர் படத்தின் 'Quit Pannuda' பாடலின் லிரிக்கல் வீடியோவை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசு வழங்கும் விதமாக இந்த லிரிக்கல் வீடியோவை இன்று வெளியிடுவதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்த புதிய பாடலில் விஜய்யின் மேலும் புதிய தோற்றம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று வெளியாகும் 'Quit Pannuda' பாடலின் லிரிக்கல் வீடியோ மக்கள் மத்தியில் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1316753918018297856