கொரோனவிலிருந்து மீண்ட தமன்னா.. வைரலான வீடியோ.!

Author
Praveen Rajendran- inCinema
Report
0Shares

நடிகை தமன்னா கொரோனா பாதிப்பில் இருந்து வீடு திரும்பினார். அப்போது அவரது பெற்றோர் அவரை கட்டியணைத்து வரவேற்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா உறுதி செயப்பட்டது. அப்போது தனக்கும் தனது வீட்டு ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஐதராபாத்தில் வெப் சீரிஸ் ஷூட்டுக்காக சென்ற தமன்னா உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அதன் பிறகு மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார் தமன்னா. அப்போது தனது பெற்றோர் தன்னைக் கட்டியணைத்து வரவேற்றதாக ஒரு வீடியோ பதிவில் தமன்னா தெரிவித்திருந்தார்.