மாமனார் வீட்டில் திருடிய பிரபல சீரியல் நடிகை- போலீசில் ஆஜர்

Author
Fathima- inCinema
Report
0Shares

திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல சீரியல் நடிகையான சுசித்ரா பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.

தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர் சுசித்ரா, இவரது கணவர் மணிகண்டன் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

சினிமா ஆசையில் பண்ருட்டியிலிருந்து சென்னை வந்த மணிகண்டன், சரியான வாய்ப்பு கிடைக்காததால் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.

அந்த சமயத்தில் சுசித்ராவை சந்தித்து காதலில் விழுந்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கால் இருவரும் வேலையிழந்து கஷ்டப்பட, சொந்த ஊரான பண்ருட்டிக்கு வந்துள்ளனர்.

இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை திருட சொல்லி மணிகண்டனை வற்புறுத்தி உள்ளார் சுசித்ரா.

அந்த பணத்தை கொண்டு நாம் குறும்படம் எடுத்து பிரபலம் ஆகி விடலாம் என ஆசை வார்த்தைகள் கூறி இருக்கிறார்.

அவர்கள் போட்ட திட்டப்படி சுசித்ரா தனக்கு சென்னையில் வேலை இருக்கிறது என சொல்லி கிளம்பி இருக்கிறார்.

அதன் பிறகு சில தினங்களில் மணிகண்டன் வீட்டில் அனைவரும் வெளியே சென்ற நேரத்தில் சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துள்ளார்.

பூட்டு உடைத்து நகை திருடுபோனதை அறிந்த மணிகண்டனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்ததுடன் போலீசில் புகாரளித்தனர்.

இதன்பேரில் வழக்குபதிவு செய்து தலைமறைவான மணிகண்டன் மற்றும் சுசித்ராவை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் பண்ரூட்டி போலீஸ் நிலையத்தில் சுசித்ரா ஆஜராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.