விஜய்சேதுபதிக்கு ஆதரவாக குஷ்பு, ராதிகா- பிரபல இயக்குனரின் காட்டமான கேள்வி

Author
Fathima- inCinema
Report
0Shares

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800ல் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், பிரபல நடிகைகளாக குஷ்பு மற்றும் ராதிகா சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலடியாக பிரபல இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "பந்துவீச்சாளரின் கடிதத்தில் பள்ளிபருவத்து போர்ச்சூழல்கள் வருத்தமே... ஆனால் முரண்பாடுகள் ரணமாக இருக்குபோது எழுதி நூலாக தமிழில் வெளிவராத ஒரு பயோகிராபியை எப்படி சந்தேகிக்காமல் இருப்பார்கள்? சுயசரிதை உள்ளூரில் தமிழில் ஏன் வெளியிடவில்லை?" என்று முத்தையா முரளிதரனிடம் கேட்டுள்ளார்.

ஆஸ்பத்திரி, அப்பளம், விமானம், ஐ பி எல் பயிற்சியாளர் பணி கருத்து பரப்புமா? இதற்கும் நடிப்பு சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்? இது முரண்பாட்டை தீர்க்குமா? என் மரியாதைக்குரிய சகோதரி" என்று ராதிகாவிடம் கேட்கும் சீனு ராமசாமி, .

"சகோதரி வணக்கம் முன்னாடி நீங்க மணியம்மையாராக நடிச்சீங்க. இப்ப நடிக்க முடியுமா? சகோதரி நடிப்பு சுதந்திரம் வேற சமூக பரப்பில் ஒரு நடிகருக்கு உண்டாகும் மாற்றம்" என்று குஷ்புவிடம் கேள்வி எழுப்புகிறார்.