விஜய்சேதுபதிக்கு கமல்ஹாசன் ஸ்டைலில் கருத்து சொன்ன பார்த்திபன் - கலாய்க்கும் நெட்டிசன்கள்

Author
Nalini- inCinema
Report
0Shares

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான '800'திரைபடத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என்றும், நடிக்கலாம் என்றும் திரைக்கலைஞர்கள் பலரும் தங்களது கருத்துகளை ஓரிரு நாட்களாக கருத்து தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்புகள் தொடர்வதால் அப்படத்திலிருந்து விலக விஜய்சேதுபதி முடிவெடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் பார்த்திபன், விஜய்சேதுபதி நடிக்கலாமா? நடிக்கக்கூடாதா? என்று சொல்லாமல், அவர் என்ன முடிவெடுத்திருக்கிறார், எதற்காக அந்த முடிவெடுத்திருக்கிறார் என்பதை கமல்ஹாசன் பாணியில் சொல்லியிருக்கிறார்.

பார்த்திபன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது -

''முத்தையா முரளியின் சூழல் பந்தை,

ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி. எதிர்ப்புகள்-எதிர்பார்ப்புகளாக bounce ஆகிவரும்

பந்தினை லாவகமாக அடித்து boundary-யைத்

தாண்டி சிக்சராக விளாசி,(அதாகப்பட்டது தமிழ்

உணர்வறிந்து கைவிட்டேன் என) ஆடியன்ஸ்

மட்டுமில்லாமல் அம்பையர்ஸையும் cheers girls

போல ஆடவைத்து ஆரவாரத்துடன் 'தமிழ்மக்கள்' செல்வன்ந்தர்

ஆகிவிடும் வியூகமோ?என்பதென்

யூகம்!!!

(காலங்காத்தால.)நடப்பது நன்மையே. so

நன்மையே நடக்கும் என நம்புவோம்!!!'' என்று தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

பார்த்திபனின் இந்த பதிவை படித்துவிட்டு, ''யாருக்காவது புரியுதா. இதற்கு அர்த்தம் என்ன?'' என்று சிலர் கமென்ட் தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலரோ கலாய்.. கலாய்த்துள்ளனர் '' கமல்ஹாசன் பாணியில் கருத்து சொன்ன ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.!?''என்று கலாய்த்துள்ளனர்.