சிம்பு- த்ரிஷாவுக்கு திருமணமா?-டி.ராஜேந்திரன் விளக்கம்

Author
Praveen Rajendran- inCinema
Report
0Shares

நடிகை த்ரிஷாவுக்கும் சிம்புவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவல் குறித்து டி.ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் முன்ணனி நடிகையாக வலம்வருபவர் நடிகை த்ரிஷா, இவருக்கு தற்போது வயது 37 ஆகிறது.

இவரது சக நடிகைகள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது, ஆனால் த்ரிஷா மட்டும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதற்கு முன் த்ரிஷா அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அது முறிந்து போனது குறிப்பிடத்தக்கது.

இடையில் இவருக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் இருந்ததாக தகவல் வெளியானது, ஆனால் அவரும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இவரைப்போலவே இன்னும் திருமணம் ஆகாத நடிகர் சிம்புவும் நடிகை த்ரிஷாவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் பரவியது.

இது குறித்து சிம்புவின் தந்தையான டி.ராஜேந்திரன் அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு டிஆர் அவர்கள் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்துள்ளார்.

நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் அலை, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.