நடிகர் கார்த்தி-ரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

Author
Praveen Rajendran- inCinema
Report
7624Shares

நடிகர் கார்த்தி-ரஞ்சனி தமபதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகர் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி அதன் பின் பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாது கதாநாயகனாக வலம் வருகிறார்.

இவருக்கு கடந்த 2011ம் ஆண்டு ரஞ்சனி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது அதன் பின் 2013ம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது அவரது பெயர் உமையாள் என்பதாகும்.இந்த நிலையில் அடுத்து 7 வருடங்களுக்கு பிறகு மகன் பிறந்துள்ளார்.

இது குறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது,"அன்பு நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு எங்களுக்கு மகன் பிறந்துள்ளான்.இந்த இக்கட்டான சூழலில் உதவியாக இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி சொல்கிறேன்.அனைவரது ஆசிர்வாதமும் தேவை".