"800" பட விவகாரத்தில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது-இயக்குனர் சமுத்திரக்கனி

Author
Praveen Rajendran- inCinema
Report
15458Shares

நடிகை விஜய் சேதுபதி "800" படத்தில் இருந்து விலகியது வரவேற்கத்தக்கது என இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான "800" என்ற திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது இதற்கு பல்வேறு தரப்பு அரசியல்வாதிகளும்,ரசிகர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கையில் இந்த திரைப்படமானது அரசியல் சம்மந்தப்பட்ட திரைப்படம் அல்ல இது முழுக்க முழுக்க முரளிதரன் அவர்களின் கிரிக்கெட் பயணத்தை மையமாக கொண்டு தான் நகர்கிறது என தெரிவித்தது.மேலும் முத்தையா முரளிதரன் அவர்களும் இதுபற்றி தெளிவான விளக்கமும் அளித்திருந்தார்.இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு அறிக்கையில்

"என் மீது உள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்த விஜய் சேதுபதி அவர்கள் விலக வேண்டும் என்று சிலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் அதனால் என்னால் ஒரு தலைசிறந்த கலைஞனின் பயணம் தடைபடக்கூடாது என்பதால் விஜய் சேதுபதி அவர்களை இந்த முடிவினை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"

இதற்கு விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் அறிக்கையை பகிர்ந்து நன்றி.. வணக்கம் என்று சொல்லி ‘800’ படத்துக்கு முடிவு அளித்துள்ளார்.இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து இயக்குனர் சமுத்திரக்கனி கூறுகையில் "இந்த முடிவு ஒரு உணர்வுபூர்வமான முடிவு என்றாலும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஜய் சேதுபதி சிறப்பான முடிவு எடுத்துள்ளார்" என கூறினார்