இதைசெய்யவே பெரிய மனசு வேணும்: விஜய் சேதுபதியினை பாராட்டிய குஷ்பு..

Author
Irumporai- inCinema
Report
10888Shares

விஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்தவர்கள் தண்டிக்கபடவேண்டும் என பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தது.இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை தெரிவிக்க நடிகர் விஜய் சேதுபதி அந்த படத்திலிருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில் விஜய்சேதுபதியின் மகளுக்கு ட்வீட்டர் வாசி ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்து இருந்தார்.இந்தசம்பவத்திற்கு பலரும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பாஜக பிரமுகர் குஷ்பு தனது டிவிட்டர் பதிவில்

அன்புள்ள விஜய் சேதுபதி நீங்கள் தைரியமானவர், உங்கள் குடும்ப உறுப்பினருக்கு மிரட்டல் வந்திருப்பது காட்டுமிராண்டிதனமானது,இதற்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கபடவேண்டும்என தெரிவித்துள்ள குஷ்பு.


நீங்கள் செய்ததை செய்ய பெரிய மனசு வேண்டும், நாங்கள் உங்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம் என தெரிவித்துள்ளார்..