நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையை சேர்ந்தவர்

Author
Praveen Rajendran- inCinema
Report
4429Shares

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த நபர் இலங்கையை சேர்ந்தவர் என் தெரியவந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார், ஆனால் இதற்கு பல்வேறு தரப்பு மக்களும் பல காட்சிகள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களுது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

இதனிடையே முத்தையா முரளிதரன் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு விஜய் சேதுபதியிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் அழிக்கும் விதமாக அதனை ரீ ட்விட் செய்து "நன்றி..வணக்கம்" என குறிப்பிட்டு ஒரு முடிவளித்தார்.

முன்னதாக விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதாக கூறியபோது அவரது மகளுக்கு ஆபாச மிரட்டல் ஒன்று வந்தது, இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இது குறித்து 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அந்த பதிவு போட்ட நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த பதிவை போட்ட நபர் இலங்கையில் உள்ளார் என்பது அந்த ஐபி முகவரி மூலம் கண்டறியப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இன்டர்போல் உதவியுடன் அந்த நபரைக் கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றனர்.