"800" பட விவகாரம்- தமிழ் தாய்க்கு பிறந்திருக்க வாய்ப்பில்லை- இயக்குனர் அமீர் கண்டனம்

Author
Praveen Rajendran- inCinema
Report
17552Shares

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் நிச்சயமாக தமிழ் தாய்க்கு பிறந்திருக்க வாய்ப்பில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் இயக்குநர் அமீர்.

முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருந்ததற்காக நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தது.

இந் நிலையில் அவரது மகளுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் ஆபாச மிரட்டல் விடுக்கப்பட்டது,இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்,

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான அமீர் அவர்கள் தெரிவிக்கையில்,"இந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கு ஒவ்வொரு தனி மனிதனும் தனது கருத்தை சொல்வதற்கான சுதந்திரமும் உரிமையும் உள்ளது.

அதே போல ஒவ்வொரு மனிதரும் தான் விரும்பிய தொழிலை செய்வதற்கும் உரிமை உண்டு, அதன் படி தான் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக விஜய் சேதுபதி ஒப்பந்தமானார்.

முத்தையா முரளிதரன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றுப் பின்னணியில் இன்னும் முடிவு பெறாத, நீதி கிடைக்கப் பெறாத ஈழ அரசியல் இருக்கின்ற காரணத்தாலும் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இனப்படுகொலை பற்றிய நிகழ்வுகள் இருப்பதாலும் தமிழருக்கு எதிராக உள்ள நிகழ்வுகள் நிறைந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை தமிழ் மக்கள் விரும்பாமல் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதன் விளைவாக முத்தையா முரளிதரன் அவர்கள் நடிகர் விஜய் சேதுபதியிடம் இந்த படத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு சம்மதம் தெரிவித்து விஜய் சேதுபதியும் அந்த படத்தில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் மீது கோபம் கொண்ட சிலபேர் எல்லைமீறி தங்களது பதிவுகளை போட்டுள்ளனர். குறிப்பாக அவரது மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த செயலானது மிகவும் மோசமான ஒன்றாகும்,

இப்படிபட்ட செயலை செய்த ஒரு நபர் நிச்சயமாக ஒரு தமிழ் தாய்க்கு பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன்.

மேலும் இதுபோன்று நிகழ்வுகள் நமது மண்ணில் நடைபெறாமல் காப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதும் நமது அரசாங்கம் மற்றும் காவல் துறையின் தலையாய கடமையுமாகும் என வேண்டுகிறேன்” இவ்வாறு தனது அறிக்கையில் கூறியிருந்தார்.