பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படத்தில் பாபி சிம்ஹா

Author
Irumporai- inCinema
Report
14282Shares

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை சீறும் புலிகள் என்ற தலைப்பில் படமாகிறது.

நீலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வெங்கடேஷ் குமார்.ஜி இயக்கும் இந்த படத்தில், பாபி சிம்ஹா நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் இலங்கை வரைபடத்துக்கு முன், பாபிசிம்ஹா உட்கார்ந்திருப்பது, அருகில் புலியுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இணையதளங்களில் வைரலாகியுள்ளன.

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி நிறைய படங்கள் வந்தாலும் தமிழில்உருவாகும் முதல்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.