சாட்டை எடுத்து பயம் காட்டும் கார்த்திக்... மிரண்ட திரை ரசிகர்கள்!!

Author
Irumporai- inCinema
Report
4416Shares

கார்த்தி நடிக்கும் சுல்தான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

ரெமோ படத்தில் இயக்குனராக அறிமுகமான பாக்கியராஜ் கண்ணன் சுல்தான் படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக கார்த்தியும், கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய. விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளார். கடும்பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் கார்த்தி, அன்பான சகோதர சகோதரிகளே.. உங்களின் அன்பால்தான் எங்களால் முன்னோக்கிச் செல்ல முடிகிறது சுல்தானின் ஃபர்ஸ்ட் லுக்கை உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். Love You Guys" என பதிவிட்டுள்ளார்.அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சுல்தான் வெளியாகும் என கூறப்படுகிறது..