பிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்

Author
Praveen Rajendran- inCinema
Report
765Shares

நடிகர்,நடன இயக்குனர்,இயக்குனர் என பன் முகங்களைக் கொண்ட ராகவா லாரன்ஸ் தனது பிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமான லாரன்ஸ் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.மேலும் இவர் பலவேறு சமூக சேவைகளை செய்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கியுள்ள லாரன்ஸ் அதில் கவனம் செலுத்தி வருகிறார்.பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்துக்கு "ருத்ரன்" என பெயரிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்த அறிவிப்பை லாரென்ஸ் தனது பிறந்தநாளில் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி ஜி.வி.பிரகாஷ்-லாரன்ஸ் இணைத்து பணியாற்றும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.