யூடியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ்

Author
Nalini- inCinema
Report
1545Shares

தன் மீது அவதூறு பரப்பிய யூடியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்ற வாலிபர் எப்.எப். நியூஸ் என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார்.

அதில் சுஷாந்த் சிங் வழக்கில், அவரது காதலியான நடிகை ரியா சக்ரவர்த்தி நாடு விட்டு தப்பிக்க பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் உதவினார் என்றும், சுஷாந்தின் மரணம் குறித்து முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் மந்திரி ஆதித்ய தாக்கரே ஆகியோருடன் அக்‌ஷய் குமார் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும், எம்.எஸ்.தோனி படத்தில் நடிக்க சுஷாந்த் சிங் தேர்வானதில் அக்‌ஷய் குமாருக்கு அதிருப்தி ஏற்பட்டது என்று ரஷித் சித்திக் தனது சேனலில் கூறியுள்ளார்.

இந்த நியூஸ் பெரும் பரபரப்பானதால் அதிகமானோர் அந்த யூடியூப் சேனலை பார்க்கத் தொடங்கினர்.

இதனையடுத்து, தன் மீது அவதூறு செய்தியை பரப்பிய ரஷித் சித்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் எனவும் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

அந்த நோட்டீசில், ரஷித் சித்திக்கின் போலி மற்றும் அவதூறு வீடியோக்களால் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

ரூ.500 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். ரஷித் சித்திக் தனது செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 3 நாட்களுக்கு நோட்டீசுக்கு பதில் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் என அதில் கூறப்பட்டுள்ளது.