விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் - வெளியான பகீர் தகவல்

Author
Nalini- inCinema
Report
2620Shares

கொரோனா தளர்வு அறிவித்ததும் நடிகர் அஜீத் நடித்து வரும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார்.

ஆந்திராவில் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் அஜித்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஏற்பட்டதாகவும் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

விபத்து ஏற்பட்டதும் நடிகர் அஜீத்துக்கு உடம்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயினும் , அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் விசாரித்தபோது, பெரிய விபத்து இல்லை என்றும், கையில் லேசான காயம் மட்டுமே, ஆனால், படப்பிடிப்பு ஏதும் தடைபடவில்லை என்று தெரிவித்தார்.