சூரரைப் போற்று படத்தில் கலாம் வேடத்தில் நடித்தவர்!.. படம் வெளியாகும் முன் உயிரிழந்தார்

Author
Fathima- inCinema
Report
4215Shares

சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாமாக நடித்து அசத்திய ஷேக் மைதீன் அவர்கள் படம் வெளியாகும் முன்பே உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வேடத்தில் நடித்தவர் ஷேக் மைதீன்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இவர் அப்துல் கலாமைப் போன்ற உருவ தோற்றம் இருப்பதால் பிரபலமடைந்தவர். இதனால், 'உடுமலை கலாம்' எனவும் அழைக்கப்பட்டவர்.

அப்துல் கலாம் போன்றே இருப்பதாலும், அவர் மீது கொண்ட தீவிர பற்றினாலும் இளம் தலைமுறையினருக்கு கலாமின் அறிவுரைகளை எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டிருந்தார்.

குறும்படத்தில் நடித்ததன் மூலம் சூரரைப்போற்று படவாய்ப்பு வர, அதனால் மனம் மகிழ்ந்து போனாராம் உடுமலை கலாம்.

இப்படம் வெளியாகும் போது தன்னைப் பற்றி பலருக்கும் தெரியவரும் என்பதால் படம் வெளியாகும் நாளுக்கு காத்திருந்துள்ளார்.

ஆனால் படம் வெளியாகும் தேதி தள்ளிக்கொண்டே போக, உடல்நிலை சரியில்லாமல் கடந்த யூலை மாதம் 17ம் தேதி காலமானார்.

உடுமலை கலாமின் பிரிவை தாங்க முடியாத குடும்பத்தினர், சூரரைப் போற்று படத்தையும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார் அவரது மகன்.