நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்!

Author
Irumporai- inCinema
Report
542Shares

டிசம்பர் 5 மற்றும் 6ல் இலவச சேவை வழங்க உள்ளதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.

ஆன்லைன் தளமான நெட்பிளிக்ஸில் திரைப்படங்கள், சீரிஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண பொதுவாக பணம் செலுத்த வேண்டும்.

ஆனால் வரும் டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவச சேவை வழங்கப்படுவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் இந்த சேவை தொடங்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைவரும் நெட்பிளிக்ஸ் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே, இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மை அலுவலர் கிரெக் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்

கடந்த சில மாதமாக இந்தியாவில் நெட்பிளிக்ஸ் தனது ஸ்ட்ரீமிங் தளத்தை, அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.