சர்ச்சையை கிளப்பும் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Author
Irumporai- inCinema
Report
699Shares

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன்,போன்றோர் நடிக்கிறார்கள்.யுவன் சங்கர் ராஜா இசையமைக்க எம். நாதன் ஒளிப்பதிவு செய்கின்றார்.

இப்படத்தில் இஸ்லாமிய இளைஞராக, அப்துல் காலிக் என்கிற வேடத்தில் நடிக்கிறார் சிம்பு.

கொரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.இந்த நிலையில் புதுச்சேரியில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்த மாநாடு படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.