நயன்தாராவுடன் சீரியல் நடிகை கண்ணம்மா எடுத்துக் கொண்ட 'ஃபேன் கேர்ள்' மொமெண்ட் புகைப்படம் வைரல்

Author
Nalini- inCinema
Report
2854Shares

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் கண்ணம்மா சீரியல் நடிகை எடுத்துக் கொண்ட புகைப்படம் இப்போது வேற லெவலில் வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி நடிகை ரோஷினி ஹரிபிரியன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாரதி கண்ணம்மா' சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த சீரியலில் தனது நடிப்பால் பெரும் அலைகளை உருவாக்கி வருகிறார்.

சமீபத்தில் ரோஷினி தனது பாரதி கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் தன்னைப் பற்றிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்தப் படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

தற்போது ரோஷினியின் இன்ஸ்பிரேஷன் நடிகையான நயன்தாராவுடன் அவர் எடுத்துக் கொண்ட படம் இணையத்தில் வலம் வருகிறது.

அதில் ரோஷினியின் 'ஃபேன் கேர்ள்' மொமெண்ட் தெரிகிறது. நயன்தாராவின் தீவிர ரசிகையான ரோஷினி, அவரின் நிறைய படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

அந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷ்னி ஹரிபிரியன் மூக்குத்தி அம்மன் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.