தமிழக அரசுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்த நடிகர் தவசி

Author
Irumporai- inCinema
Report

முருக்கு மீசையோடு நகைச்சுவை கலந்த நடிப்பால் திரையில் தோன்றி ரசிகர்களை சிரிக்கச் செய்த நடிகர் தவசி, புற்று நோய்க்கு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் இன்று இரவு 8.15 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சரவணன் உறுதிப்படுத்தினார்.

தமிழில் சுமார் 30 படங்களில் நடித்திருந்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து குறி சொல்லும் கோடங்கியாக நடித்த காட்சி அனைவராலும் மறுக்க முடியாது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த தவசி (பிபிசிக்கு அளித்த பேட்டியில்),தன்னைப் போல பல துணை நடிகர்கள் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய தவசி.

அவர்கள் சிகிச்சைக்கு கூட வழியில்லாமல் இருப்பதாகவும் , அவர்களுக்கு தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும், தவசி வேண்டுகொள்விடுத்திருந்தார்.

இந்த நிலையில், தனது வாழ்வின் கடைசி நாட்களில் அவர் அழுது கொண்டே உயிரிழந்ததாக தவசியின் குடும்பத்துக்கு நெருக்கமான உறவினர்கள் தெரிவித்தனர்.

தவசியின் உடல் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு திங்கட்கிழமை இரவு கொண்டு செல்லபட்டது.

(ஆதாரம்: பிபிசி தமிழ்)