தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான அஜித் அவர்கள் நடித்து வரும் "வலிமை" படத்தின் ஸ்டண்ட் கட்சியின் புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் தல அஜித் அவர்கள் தற்போது தனது 59வது படமான "வலிமை" படத்தில் நடித்த வருகிறார் இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பாதிப்பிற்கு முன்பே முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது 2ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித் அவர்கள் வில்லன்களுடன் மோதும் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றன.
அஜித் பைக்கில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சியை படமாக்கிய போது, எதிர்பாராத விதமாக அஜித்தின் பைக் கவிழ்ந்தது. இதில் அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது என்று செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் அஜித் பைக் ஓடும் புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.