உருவாகிறது மாயாண்டி குடும்பத்தார் 2ம் பாகம்: ஹீரோ யார் தெரியுமா?

Author
Praveen Rajendran- inCinema
Report

மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2ம் பக்கத்தில் நடிக்கவுள்ள கதாநாயகன் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

"மாயாண்டி குடும்பத்தார்" திரைப்படம் 2009ம் ஆண்டு ராசுமதுரவன் இயக்கத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சீமான், மணிவண்ணன் உள்பட மொத்தம் 9 இயக்குனர்கள் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் 2ம் பாகத்தை "ஒரு கல்லூரியின் கதை" படத்தை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்கவுள்ளார். இதில் கதாநாயகனாக கவுதம் கார்த்திக் நடிக்கிறார். மேலும் மற்ற நடிகர்,நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.