சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் போனில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் நடிகர்,நடிகைகள் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதும் அதன் பிறகு அது வதந்தி என தெரிய வருவதும் வழக்கமான ஒன்று தான். இது போல ஏற்கனவே நடிகர்கள் ரஜினி,விஜய்,அஜித் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு இதுபோல வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதுபோல சென்னை பெசன்ட் நாரில் உள்ள நடிகர் விக்ரம் அவர்களின் வீட்டில் வெடிகுண்டு இப்பதிக கூறி மர்ம நபர் ஒருத்தர் போனில் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருவான்மியூர் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். போன் செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்த விசாரணையையும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.