வெளியானது "சார்பட்டா" படத்தின் பர்ஸ்ட் லுக்

Author
Praveen Rajendran- inCinema
Report

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள "சார்பட்டா" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

அட்டகத்தி,மெட்ராஸ்,கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கியத்தின் மூலம் மக்களின் கவனத்தைப் பெற்றவர் பா.ரஞ்சித். இவர் தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள "சார்பட்டா" படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குத்துச்சண்டை வீரர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக ஆர்யா அவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றியுள்ளார்.

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.