நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் கொரோனா முடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் தள்ளிப்போனது.
இதற்கிடையே மாஸ்டர் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிற பேச்சுக்கள் கூட அடிபட்டது. ஆனால் மாஸ்டர் திரையரங்குகளில் தான் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு பொங்கலுக்கு வெளியிட்டிற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரினால் வழங்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.