எங்களோட ஒன்றரை வருட உழைப்பு - லீக்ஸ் காட்சிகளை ஷேர் பண்ணாதீங்க- லோகேஷ் கனகராஜ்

Author
Irumporai- inCinema
Report

மாஸ்டர் படத்தை திரைக்கு கொண்டு வர ஒன்றரை வரும் கஷ்டப்பட்டிருப்பதாகவும், படம் தொடர்பான லீக் காட்சிகள் கண்ணில் பட்டால்.

அதனை ஷேர் செய்ய வேண்டாம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில்: மாஸ்டர் படத்தை உங்களின் பார்வைக்கு கொண்டு வர ஒன்றரை வருடமாக போராடியிருக்கிறோம்.

இந்தப் படத்தை திரையரங்களில் நிச்சயம் ரசிப்பீர்கள் எனக் கூறியுள்ள லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் சம்மந்தமான லீக் காட்சிகள் கண்ணில் பட்டால் தயவு செய்து ஷேர் செய்ய வேண்டாம்.

எல்லோருக்கும் நன்றி. இன்னும் ஒருநாள் தான் இருக்கு. இது உங்களது மாஸ்டர்' என குறிப்பிட்டுள்ளார்.

சில மணி நேரத்திற்கு முன்பாக மாஸ்டர் படத்தின் சில நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சி அடையவைத்தது.

இந்த நிலையில், இணையத்தில் வெளியான காட்சிகளை நீக்க சட்டப்படியான நடவடிக்கை எடுக்கபடும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.