தெறிக்கவிட்ட மாஸ்டர் படத்தின் முதல் காட்சி: மாஸ் காட்டிய தளபதி மற்றும் மக்கள் செல்வன்

Author
Praveen Rajendran- inCinema
Report

தளபதி மற்றும் மக்கள் செல்வன் இருவரும் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஊர்வன படம் தான் மாஸ்டர். இந்த படம் தயாராகி நீண்ட நாட்களாக கொரோனா காரணமாக வெளியீட்டுக்கு காத்திருந்தது. இவை அனைத்தையும் கடந்து தற்போது பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ளது.

இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார், மேலும் மிரட்டும் வில்லன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

தளபதி அவர்கள் ஜேடி(ஜான் துரைராஜ்) என்ற கதாபாத்திரத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்,மேலும் பவானி என்ற கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் வருகிறார். தளபதி விஜய் அவர்கள் கல்லூரியால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணியில் இருந்து நீக்கப்படுகிறார். அதன் பிறகு சிறைக்கு வார்டனாக செல்லும் தளபதி அவர்களுக்கு பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது.

இதில் விஜய் சேதுபதிக்கும் தளபதி விஜய்க்கும் எப்படி மோதல் ஏற்படுகிறது. இதன் பின்னணி என்ன என படம் முழுவதும் சுவாரசியமாக நகர்த்தி செல்கிறார் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதற்கு வலு சேர்க்கும் விதமாக அனிருத் அவர்களின் பாடல்களும் பின்னணி இசையும் பட்டையைக் கிளப்பியுள்ளன.

குறிப்பாக ரெட்ரோ பின்னணி இசையாக "கில்லி" படத்தின் இசையைக் கொண்டுவந்துள்ளது திரையரங்குகளில் பொங்கல் அன்று தீபாவளியாக சரவெடி வெடித்தத்த்து. மொத்தத்தில் நீண்ட நாட்களாக மாஸ்டர் படத்திற்காக காத்திருந்த தளபதி மற்றும் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் செம்ம ட்ரீட்டாக இந்த படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.