தளபதி 66 படத்தில் மீண்டும் இணையும் "மாஸ்டர்" கூட்டணி

Author
Praveen Rajendran- inCinema
Report

தளபதி விஜய் அவர்களது 66வது படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் அவர்களோடு இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான "மாஸ்டர்" படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து தளபதி விஜய் அவர்கள் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தந்து 65வது படத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இன்னும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பே தொடங்காத நிலையில்,தளபதி 66 படத்தைப் பற்றி பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதில் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்களோடு மீண்டும் விஜய் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றிய எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.