பிரபல கதாநாயகனுக்கு மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி..யாருக்கு தெரியுமா?

Author
Praveen Rajendran- inCinema
Report

மீண்டும் பிரபல கதாநாயகன் ஒருவருக்கு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

'கே.ஜி.எஃப் 1' படத்தைத் தொடர்ந்து, 'கே.ஜி.எஃப் 2' படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்று இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'கே.ஜி.எஃப் 2' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் பிரபாஸை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்.

இந்தப் படத்தையும் 'ஜே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பூஜை முடிவுற்று, முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதில் வில்லனாக நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் மக்கள் செல்வன் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை.

முன்னதாக பொங்கல் வெளியீடாக வந்த "மாஸ்டர்" படத்தில் இவரது வில்லன் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.