ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்ற சூரரைப்போற்று திரைப்படம்

Author
Praveen Rajendran- inCinema
Report

சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.

தற்போது பல்வேறு விருதுகளை வாங்கி குவித்து வரும் சூரரைப்போற்று படம் தற்போர்த்து ஆஸ்கர் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளது.

ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம். அந்த வரிசையில் பொதுப்பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம் பெறவேண்டும்.

அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள். இந்தப் பொதுப்பிரிவுப் போட்டியில் 'சூரரைப் போற்று' திரையிடலுக்காக அகாடமி திரையிடல் அறையில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வெற்றியாளர் அறிவிக்கும் நாள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்ன நடக்கும் என்று.