முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஹிப் ஹாப் ஆதி

Author
Praveen Rajendran- inCinema
Report

ஹிப் ஹாப் ஆதி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படம் ‘அன்பறிவு’. இப்படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார். ஹீரோயினாக காஷ்மிரா பர்தேசி நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

அஜித்தின் விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரதீப் ராகவ் எடிட்டிங் செய்கிறார்.