நான் சொந்தமாக தயாரிக்கும் படத்தில் நடிக்க வரீங்களா? நடிகர் வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்

Author
Nalini- inCinema
Report

நடிகை மீரா மிதுன் தான் சொந்தமாக படம் தயாரிக்கப்போவதாகவும், விருப்பம் இருந்தால் அதில் நடிக்க வருமாறு நடிகர் வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேல் சமீபத்தில் வாட்ஸ் அப் குழு நண்பர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில், “நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி இருப்பது பெரிய ரணமாக இருக்கிறது. எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை உள்ளது. ஆனால் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை'' என்றார். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலை பாடியும் கண்கலங்கினார்.

அதைப் பார்த்து வருந்திய நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில், “வடிவேலுவின் சமீபத்திய பேச்சுகள், பேட்டிகளை நான் பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்பட்டு பாடினார். எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும் யாரையும் யாருமே ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம்.

உங்கள் தெனாலிராமன் படம் பார்த்திருக்கிறேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. நிறைய பேர் நடிப்புக்கான விதிமுறையே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பெரிய சகாப்த மனிதன். கண்கலங்க கூடாது. நான் சொந்தமாக படம் தயாரிக்க உள்ளேன். எனது படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடியுங்கள். நான் மிகவும் பெருமைப்படுவேன்'' என்று கூறியிருக்கிறார்.