உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா - ரசிகருக்காக ஆடியோ வெளியிட்ட ரஜினி

Author
Mohan Elango- inCommunity
Report
321Shares

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் ரஜினிகாந்திற்காக தன்னுடைய ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், “தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு.

உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்” என்றிருந்தார்.

இதற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ மூலம் பதிலளித்துள்ளார். அதில், “முரளி... நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா. தைரியமா இருங்க. நான் இறைவணை பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து வீட்டுக்கு வந்திடுங்க.

நீங்க குணமடைந்து வீட்டுக்கு வந்த பிறகு தயவு செய்து என் வீட்டிற்கு குடும்பத்துடன் வாங்க. நான் உங்களைப் பார்க்கிறேன். தைரியமா இருங்க” எனத் தெரிவித்துள்ளார்.