3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

Author
Nalini- inCommunity
Report
601Shares

மராட்டிய மாநிலம் பிவாண்டியில் நேற்று முன்தினம் அதிகாலை மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த கோர விபத்தில் குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மீட்புப்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். இடிபாடுகளில் சிக்கியர்களை மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை வரையில் 21 சடலங்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில், 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 32 ஆக உயர்ந்துள்ளது.

1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் மோசமான நிலையில் இருந்ததாக அப்பகுதி வாசிகள் கூறியுள்ளனர்.