ஆதரவற்ற 2 உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்த பெண் போலீஸ்: குவியும் பாராட்டுகள்

Author
Praveen Rajendran- inCommunity
Report
609Shares

நாகையில் ஆதரவற்ற இருவரின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்த பெண் போலீஸ் ஏட்டின் மனித நேயத்துக்கு பொதுமக்களிடம் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நாகை மாவட்டம் வாய்மேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும்,80 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் இறந்து கிடந்துள்ளனர்,இவர்களது உடலை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களுடைய உடலை பெற்றுக்கொள்வதற்கு ஆட்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து 2 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ய மருத்துவமனை முடிவு செய்தது.

இந்த நிலையில் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் சாவித்திரி என்பவர் அவர்களது உடலை ஆம்புலன்ஸ் மூலம் மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தார்.

முன்னதாக அவர், இறந்தவர்களின் உறவினர்களை போன்று இருவரின் உடல்களின் மேல் மஞ்சள் தெளித்து, வாய்க்கரிசி போட்டு இறுதி சடங்குகளையும் செய்தார்.ஆதரவற்று இருந்த இரு உடல்களை மீட்டு இறுதி சடங்கு செய்த பெண் போலீஸின் செயலுக்கு மக்களும் சக போலீசாரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆதரவற்றவர்களின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த பெண் போலீஸ்