பெற்ற தாயை கொன்று தீயில் எரித்த மகன்: சாம்பலை அப்புறப்படுத்திய கொடூரம்

Author
Nalini- inCommunity
Report
673Shares

தமிழ்நாட்டில் சொத்தை தன் பெயரில் எழுதிதராததால் தாயை அடித்து கொன்று தீயில் எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோக்கவாடியைச் சேர்ந்தவர் பங்கஜம். இவரது மூத்த மகன் பிரகாஷ். இவரது மனைவி முத்துலட்சுமி. பங்கஜத்திற்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வீடு ஒன்று உள்ளது.

அந்த வீட்டை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி பிரகாஷ் அடிக்கடி பங்கஜத்திடம் கேட்டுள்ளார். ஆனால் பங்கஜம் எழுதி கொடுக்கமாட்டேன் என கூறி வந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அன்று மறுபடியும் பிரகாஷ், பங்கஜத்திடம் வீடு தன் பெயருக்கு எழுதி தருமாறு கேட்டுள்ளார். அவர் மறுக்கவே, இருவருக்கும் சண்டை வந்துள்ளது.

சண்டையில், இரும்பு குழாயால் பங்கஜத்தின் தலையில் பிரகாஷ் ஓங்கி அடித்துள்ளார். தலையில் அடிபட்டதும் பங்கஜம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

பிரகாஷ் கொலையை மறைக்க வீட்டு முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த விறகு குவியலில் போட்டு தாயின் உடலை எரித்துள்ளார்.

சம்பவத்தை வெளியில் சொன்னால் உன்னையும் இதுபோல் கொன்றுவிடுவேன் என்று மனைவி முத்துலட்சுமியை மிரட்டியுள்ளார். பிரகாஷ் தாயின் உடலை எரித்து அந்த சாம்பலை அப்புறப்படுத்திவிட்டு தப்பி ஓடி தலைவறைவாகியுள்ளார்.

கணவர் தலைமறைவானதால் பயந்து போன முத்துலட்சுமி இந்த விவரம் குறித்து அக்கம், பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்த்து, வழக்குப் பதிவு செய்து பிரகாஷை தேடி வருகின்றனர்.