13 வயது சிறுமி தற்கொலை வழக்கில் திருப்பங்கள்! அண்ணன் போல் பழகிய நபரின் கொடூர செயல்

Author
Fathima- inCommunity
Report
695Shares

சென்னையில் 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பக்கத்து வீட்டுக்காரரான குணசீலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரி காந்தி நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்து 13 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம், 14- ஆம் தேதி தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவராத நிலையில், சிறுமியின் செல்போனை ஆய்வு செய்ததில், "உன் பெற்றோரிடம் தெரிவித்துவிடுவேன்" என்ற குறுந்தகவலை பக்கத்து வீட்டில் வசிக்கும் குணசீலன் என்பவர் அனுப்பியத தெரியவந்த.

இதனையடுத்து குணசீலனிடம் விசாரணை நடத்தியதில், தான் அப்படியொரு குறுஞ்செய்தியை அனுப்பவில்லை என மறுத்தார்.

இதனையடுத்து குணசீலனது செல்போனை கைப்பற்றிய பொலிசார், சைபர் கிரைம் பொலிசாரிடம் கொடுத்து ஆய்வு செய்ததில், சிறுமியை மிரட்டிய குறுந்தகவல்கள், குணசீலனுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன.

மேலதிக விசாரணையில், குணசீலன் சிறுமியை பள்ளிக்கு அழைத்து சென்று வந்ததும், அண்ணன் என நம்பி சிறுமியின் பெற்றோர் அனுமதித்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரத்தில், சிறுமியை துன்புறுத்தி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதும், அதை வைத்து மிரட்டி வந்ததும் கண்டறியப்பட்டது.

சம்பவம் நடந்த தினத்தன்று கூட, சிறுமியை மிரட்டவே பயத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து குணசீலனை கைது செய்த பொலிசார் விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.