பெற்றோருக்கு உதவ வாழைப்பழம் விற்கும் 10 வயது பள்ளி மாணவன்

Author
Nalini- inCommunity
Report
700Shares

கொரோனா ஊரடங்கு காரணமாக தனது பெற்றோரின் வாழ்தாரம் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டதை உணர்ந்த 5ம் வகுப்பு மாணவன் முனிஸ்வரன் என்ற சிறுவன் தனது குட்டி சைக்கிளில் வாழைப்பழம் விற்பனை செய்து தனது பெற்றோருக்கு உதவிக்கரம் நீட்டி அசத்தி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு பல பேரின் வாழ்வினையும், தொழிலையும் மாற்றியமைத்துள்ளது என்றால் அது மிகையாகது.

அந்த வகையில் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதரம் பாதிக்கபட்ட தனது பெற்றோருக்கு உதவும் வகையில் வாழைப்பழம் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகர் பகுதியை சேர்ந்த முருகன் - கணேஷ்வரி தம்பதிக்கும் முனிஸ்வரன், கோகுல் என்ற 2 மகன்கள். இதில் முனிஸ்வரன் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறான்.

முருகன் - கணேஷ்வரி தம்பதியின் ஒப்பந்த அடிப்படையில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களது தொழில் முடங்கமடைந்தது.

தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், சில மாதங்களாக தொழில் இல்லை என்பதால் மீட்டும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில் ஈடுபட போதிய பணம் இல்லாத காரணத்தினால் முருகன் தீக்குச்சி தயாரிக்கும் ஆலைக்கு வேலைக்கு சென்று வருகிறார்.

கணேஷ்வரி அப்பகுதியில் தள்ளுவண்டியில் பழங்கள், தேங்காய், முககவசம் விற்பனை செய்து வருகின்றார். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த தம்பதியினர் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

தந்தைக்கு குறைவான வருமானம், தாய் பழ விற்பனையும் சரியாக நடைபெறவில்லை என்பதனை பார்த்த முனிஸ்வரன், தன்னுடைய குட்டி சைக்கிள் மூலமாக வாழைப்பழம் விற்பனை செய்து பெற்றோருக்கு உதவி வருகிறார்.

தினமும் காலை, மாலை 2 மணி நேரம், தனது சைக்களில் சிறிய பெட்டியை கட்டி, அதில் தாயிடமிருந்து வாழைப்பழம் வாங்கி கொண்டு அருகில் இருக்கும் பகுதிக்கு சென்று விற்பனை செய்து வருகிறார். தினமும் இதன் மூலம் கிடைக்கும் 200 ரூபாயை தாயிடம் கொடுத்து தனது பெற்றோருக்கு உதவி வருகிறார் சிறுவன் முனிஸ்வரன்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தனது பெற்றோர் சிரமப்படுவதை பார்த்து, அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்கான வாழைப்பழம் விற்பனை செய்து வருவதாகவும், தினமும் 200 ரூபாய் கிடைப்பதாகவும், அதனை தனது தாயிடம் கொடுப்பதாகவும், அவர் 50 ரூபாய் கொடுப்பார் என்றும், அதனை தனக்கு நோட், புத்தகம் வாங்க சேமித்து வருகிறேன் என்று உற்சாகமாக கூறுகிறார் சிறுவன் முனிஸ்வரன்.