அதிகாலையில் வாக்கிங் சென்றவர் மரணம்: மகன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தந்தை

Author
Praveen Rajendran- inCommunity
Report
699Shares

புதுச்சேரி அருகே சாலை விபத்தில் மகன் உயிரிழந்த தகவலை கேட்ட தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, திருபுவனையைச் சேர்ந்தவர் விநாயகம் (56). இவரது மகன் உத்திரகுமாரன்(35). தனியார் நிறுவன ஊழியர். அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.

அதேபோல் வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் உத்திரகுமார் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று உத்திரகுமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த உத்திரகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

உத்திரகுமார் உயிரிழந்த தகவல் வீட்டிலிருந்த விநாயகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை கேட்டதும் விநாயகம் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரும் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

மகன் இறந்த செய்தியை கேட்ட தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.