ஒரு மரத்தை வெட்டினால் 10 மரத்தை நடவேண்டும்; முடியாவிட்டால் மரங்களை வெட்டக்கூடாது- உச்சநீதிமன்றம் உத்தரவு

Author
Praveen Rajendran- inCommunity
Report
0Shares

ஒரு மரத்தை வெட்டினால் 10 மரத்தை நடவேண்டும் ;முடியாவிட்டால் மரங்களை வெட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை விரிவுப்பணிக்காக மரங்களை வெட்டினால் ஒரு மரத்திற்கு விதம் 10 மரங்களை நடவேண்டும்,

அப்படி மரங்களை நட முடியாவிட்டால் மரங்களை வெட்டக்கூடாது என நெடுஞ்சாலைத்துறையை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை சாலை விரிவாக்கம் செய்தபோது சாலையின் இருபகுதிகளிலும் இருந்த லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன.

அப்படி வெட்டப்பட்ட மரங்களுக்காக நெடுஞ்சாலைத்துறை மீண்டும் லட்ச மரங்களை நட்டிருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு விசாரணைக்கு வந்தபோது நெடுஞ்சாலைத்துறை சார்பில் லட்சம் மரங்கள் நடப்படும் என தெரிவிக்கப்பட்டது, ஆனால் அதன் பிறகும் லட்ச மரங்கள் நடப்படவில்லை.

எனவே, தேசிய நெடுச்சாலையின் இரு பக்கங்களிலும் மரக்கன்றுகளை நடவும், அவற்றைத் தொடர்ந்து பராமரிக்கவும் நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது நெடுஞ்சாலைத்துறை வழக்கறிஞர் வாதிடுகையில், மரக்கன்றுகளை நடுவது தொடர்பாக வனத்துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மரங்களை நடும் பணிகள் தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், சுற்றுச்சுழல் ஏற்கனவே மோசமடையும் நிலையில், தற்போது இதுபோன்ற செயல்கள் மேலும் பாதிப்பை தான் உண்டாக்கும்,அதுமட்டுமின்றி பருவமழை காலம் 3 மாதங்கள் தாமதமாவதால் தற்போது அதனை நாம் தான் காக்க வேண்டும்.

மேலும் சாலை மேம்பாட்டுக்கு பணிக்காக ஒரு மரம் வெட்டினால் அதற்கு பதில் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாவிட்டால் சாலை விரிவாக்கத்தின் போது மரங்களை வெட்ட வேண்டாம் என்றனர்.

சென்னை-மதுரை நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கத்திற்கு வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு? எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.